Skip to content

மகான் ஷைகு சா அதி

160.00

ஆசிரியர்: ஆர்.பி.எம். கனி

மகான் ஷைகு சா அதி அவர்கள் பாரசீக நாட்டிலுள்ள ஷிராஜ் என்னும் ஊரில் கி.பி.1175 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். இயற்பெயர் முஷ்ரிபுத்தீன் ஷைகு சாஅதி. இவர்கள் நபிகள் நாயகத்தின்(ஸல்) திருப் புதல்வியை மணந்த ஹஜ்ரத் அலீ(ரலி) அவர்களின் வழித் தோன்றல் ஆவார்கள். உலகில் நீதி நூல்களைப் படைத்த சான்றோர்கள் அனைவரையும் விட சாஅதி மகான் அறநெறி போதிக்கும் முறை அற்புதமானது.

இவர்கள் எழுதிய குலிஸ்தான்¸ போஸ்தான் ஆகிய இரு நீதி நூல்களின் தமிழாக்கமே இந்நூல். இந்த இரண்டு நூல்களையும் தமிழாக்கம் செய்தவர் ஆர்.பி.எம். கனி அவர்கள். மகான் ஷைகு சாஅதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உள்ளடக்கியது என்று இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி.எம். கனி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.