Skip to content

சிறகு முளைத்த விரல்கள்

90.00

ஆசிரியர்:ஆரூர் புதியவன்

கவிதைக்கு எதிர்காலம் இல்லை என்று  கருத்துரைத்தவர் யார்?

இதோ இந்த இளைய கவிஞனின் பேனா முனையில் அவர்களுக்குப் பிரம்படி விழுகிறது. இவனுடைய பாட்டுச் சொற்கள் அவர்களுக்கு வேட்டு வைக்கின்றன. மல்லிகை பூவைப் போல் மனத்தை மயக்கவும் துப்பாக்கிக் குண்டுகளாய்த் துருவித் துளைக்கவும் கவிதை வரிகளால் முடியும் என்பதைக் காட்டியிருக்கிறான் ஆரூர் புதியவன்!

இந்த வயதில் இத்தனை சிந்தனையா ?

இந்த மேகத்தில் இத்தனை வானங்களா? அதிசயத்தோடு இந்த இளங்கவிஞனை அனைத்துக் கொள்கிறேன்.

சூரியப் பிரகாசத்தை இவன் சொற்களில் பார்க்கிறேன். நாளைய இலக்கிய வானத்தின் நட்சத்திரத்தைத் தமிழர்களுக்கு இன்றே அறிமுகப்படுத்தி ஆனந்தம் கொள்கிறேன். புதியவன் வாழ்க! புதுமைகள் வெல்க!

இவ்வாறு கவிவேந்தர் மு. மேத்தா அவர்கள் இந்த நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கூறியிருக்கிறார்.