ஒளி
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து
தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி
காணும் பொருள்களிலும்
இருக்கிறது
கவிஞனுக்குள்ளும்
இருக்கிறது
மின்னல்களை
தீப்பொறிகளை
மறைந்து விடாமல்
பாதுகாத்து வைப்பதுதான்
கவிஞனுடைய வேலை
அதைத்தான்
நான் செய்திருக்கிறேன்
ஒவ்வொரு மின்னலும்
ஒவ்வொரு தீப்பொறியும்
பார்ப்பதற்குத்
தனித்தனியாகத் தெரியும்
ஆனால் அவை
உண்மையில் ஒன்றே
ஆதியிலி ஒளி
தேவனிடம் இருந்தது
அது
தேவனாக இருந்தது
இறைவன்
முதலில் வெளிப்படுத்தியது
ஒளியைத்தான்
அதில் இறைவன்
தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டான்
அந்த ஒளியிலிருந்துதான்
பிரபஞ்சம் படைக்கப்பட்டது
கவிஞனும்
அந்த ஒளியால்தான்
படைக்கிறான்
என்று இந்நூலைப் பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.