Skip to content

இஸ்லாமும் இன்பத் தமிழும்

250.00

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு உணர்த்தும் உத்தமப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்ஹாஜ் டாக்டர். ம.மு. உவைஸ்¸ எம்.ஏ.¸ பி.எச்.டி.¸ அவர்கள் எழுதிய “இஸ்லாமும் இன்பத் தமிழும்” என்னும் நூலை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்நூலில் நாம் கேட்டிராத¸ கேட்டிருந்தாலும் அதிகம் அறிந்திராத எத்தனையோ இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களை அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி¸ அவற்றின் அழகை விளக்கும்போது அந்நூல்கள் முழுவதையும் அவசியம் படிக்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது நமக்கு. அத்துடன் பாரகாவியங்கள் பலவற்றைப் படைத்த முஸ்லிம்கள் இத்தனை சிற்றிலக்கியங்கள் என்றாலும் அவை இனிமை செறிந்த இலக்கியங்கள் என்னும் எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது.

முஸ்லிம்களும்¸ முஸ்லிம்கள் அல்லாதாரும் இஸ்லாமிய இலக்கியங்களை அறிதல் வேண்டும். அவற்றின் சிறப்பைத் தெரிதல் வேண்டும் என்பதே அல்ஹாஜ் டாக்டர். ம.மு. உவைஸ் எம்.ஏ.¸ பி.எச்.டி.¸ அவர்கள் இந்நூலை எழுதியதன் நோக்கமாகும். அவர்களின் நோக்கம் இந்நூல் மூலம் நன்கு நிறைவேறும் என்பது நம் நம்பிக்கை.

-எஸ்.எஸ். ஷாஜஹான்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்.

 

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமும் இன்பத் தமிழும்”

Your email address will not be published. Required fields are marked *