Skip to content

அசோக் துப்பறிகிறான்

75.00

ஆசிரியர் :ஆரினிகா நாசர்

“அஷோக் துப்பறிகிறான்” சிறுவர் நாவல் ஒரு பரபரப்பான துப்பறியும் நாவல். திருட்டுப்பழி சுமக்கும் தந்தையின் களங்கத்தை அகற்ற சிறுவன் அஷோக் வீறுகொண்டெழுகிறான். அஷோக்கின் துணைக்கு மேகா எனும் சிறுமி. பந்தயக் குதிரைகளைப் பற்றி கதை எழுதவேண்டும் என்கிற ஆவலில் பல தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். பலமுறை குதிரைப்பண்ணைகளுக்கும் சென்று வந்தேன். ஏறக்குறைய அழிந்தே போய்விட்ட சர்க்கஸ் கலை பற்றியும் நாவலில் விவரித்துள்ளேன். சிறுவர் சிறுமியரை டிடெக்டிவ்களாக காட்டும்போது வாசகர்கள் நம்பும்படி இருக்க வேண்டும் இல்லையா? அஷோக் – மேகாவின் துப்பறிதல்களை லாஜிக்காகவே அமைத்துள்ளேன், என்று நூலாசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.