உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை.
அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்து மறைந்தான். ஆனால் அவன் இன்னமும் வாழ்கிறான். வரலாறுகள் இன்றும் அவன் புகழ் பாடுகின்றன. மகாகவி ஷேக்ஸ்பியரின் காவியம் அவன் கதையைச் சொல்கிறது.
இருபது நூற்றாண்டு இடைவெளியை இணைத்துப் பிடிக்கிறது. புளூட்டார்க் எழுதிய சீஸரின் இந்த வரலாறு, எழுதியவனும், எழுதப்பட்டனும் கைகோர்த்து வாழ்கிறார்கள். கால வெள்ளத்தைத் தம் காலால் அடித்து விரட்டுகிறார்கள். வையத்தின் நெஞ்சத்தில் அகலாது உலாவுகிறார்கள். இதற்குக் காரணம் எழுதியவரின் திறமை, எழுதப்பட்டவனின் பெருமை!
இதோ பிரபல வரலாற்று ஆசிரியர் புளூட்டார்க் எழுதிய ஜூலியஸ் சீஸரின் அந்த வாழ்க்கை வரலாறு. இப்போது தமிழில்! தமிழாக்கம் செய்தவர் எம். ஆர். எம். முகமது முஸ்தபா.
Reviews
There are no reviews yet.