வரலாறு எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அக்கலையில் கைதேர்ந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் புளூட்டார்க். அவரது வரலாற்று நாயகர்கள் எந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயினும் அவர்களை மனிதன் என்ற கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து வரலாறு எழுதுவதே புளூட்டார்க்கின் தனித்தன்மை.
மாவீரன் அலெக்ஸாண்டர் காலத்தில் நின்று பகைவரை எதிர்க்கும் காட்சியைக் காட்டும் புளூட்டார்க், அவன் கோபத்தில் தன் நண்பனைக் கொன்று விட்டு கூடாரத்தில் அழுது புரளும் காட்சியையும் பதிவு செய்கிறார். அதன் மூலம் நாம் அலெக்ஸாண்டர் என்ற வீரனையும், அலெக்ஸாண்டர் என்ற மனிதனையும் ஒருசேரக் காண்கிறோம். இதனால் அலெக்சாண்டர் மீது இருந்த மதிப்பு பெருகுகிறதே தவிர குறையவில்லை.
இவ்வாறு கடந்த 2000 ஆண்டுகளில் வாழ்ந்த வரலாற்று வீரர்கள் பலர் புளூட்டார்க்கின் வரலாறுகளால் பெரிதும் பயன் அடைந்திருக்கிறார்கள். அத்தகைய அரிய நூலை இப்போது தமிழிலும் தருகிறோம் தமிழாக்கம் செய்தவர் எம். ஆர்.எம்.முஹம்மது முஸ்தபா.
Reviews
There are no reviews yet.