பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல்.
ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி
அழுகின்ற போதும்
மேகம்போல் அழுதவன்நீ
விழுகின்ற போதும்
விதையைப் போல் விழுந்தவன்நீ
இப்படிப் பாடுகிறார் கவிக்கோ.
இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “அப்துல் ரகுமான் சொற்சித்திரங்கள் அற்புதமாக வரையக் கூடியவர்.
வார்த்தைகளின் சித்து விளையாட்டு என்பது அவர் கடுந்தவம் இயற்றாமலே தமிழன்னை அவருக்கு வழங்கியுள்ள வரம்.
அவர் தொட்டெழுதாத பொருளே இல்லை என்கிற அளவுக்கு அத்துனை கவிதைகளை¸ கதராடைகளாக¸ கைத்தறி ஆடைகளாக¸ அதுவும் கண் கவரும் கவினுறு பட்டாடைகளாக நெசவு செய்து கொடுத்து மனிதரின் மானங்காக்கும் தேவையை நிறைவு செய்து வருகிற நிறைகுடக் கவியரசர் அவர்” என்று கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.