இரண்டு நண்பர்கள் கடிதம் வாயிலாக பேசிக் கொள்வது போல தன்னம்பிக்கைக் கருத்துக்களை இந்நூலில் ஆசிரியர் அப்துற்-றஹீம் விளக்குகிறார்.
“கடிதப் போக்குவரத்தின் நடையானது நகைப்பும் மரியாதையும் உடையதாக இருக்க வேண்டும்” என்று ஓர் அறிஞன் கூறிச் சென்றான். அவன் கூறிய வரைமுறையை ஒழுகியே இக்கடிதங்களை நான் தீட்டியுள்ளேன். இவை நான் உனக்கு அனுப்பும் இறக்கைகளுள்ள தூதுவர்களாகும். இந்தப் பரந்த உலகில் எங்கேயோ வாழ்ந்து வரும் நண்பனாகிய உன்னை என்னுடன் பிணைக்கும் அன்புத் தொடர்பாக இக்கடிதங்கள் விளங்கும் என்று நான் நம்புகிறேன். இவை உன்னுடைய கருத்தில்¸ சிந்தனையில் புதுத் திருப்பம் ஒன்றை உண்டுபண்ணும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவை உன்னைப் புகழுருவினனாக ஆக்கிப் புகழுருவினனாக வாழ வழி கோலவேண்டும் என்ற பேரவாவுடன் இவற்றை உனக்கு அனுப்பி வைக்கின்றேன். உனக்கு எல்லா நலன்களும் மேலும் மேலும் பெருக இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
Reviews
There are no reviews yet.