நூலாசிரியர் “மழலைப் பிரியன்” தமிழிலக்கியத்திலும், இதழியலிலும், முதுகலைப் பட்டம் பெற்றவர். மனித உரிமைகள் தொடர்பான முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளவர். கதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என்று பன்முகத் தளங்களிலும் எழுதும் ஆற்றல் உடையவர். பத்திரிகையாளர். இவரின் இயற்பெயர் “இக்வான் அமீர்” என்றழைக்கப்படும் “எஸ். அமீர்”. “அபாபீல்” என்பது இவரின் இன்னொரு புனைப்பெயர்.
சமரசம், தினமணி, மணிச்சுடர், தீக்கதிர், உணர்வு, ஒற்றுமை, விடியல், சிந்தனைச்சரம், மனாலுர் ஹுதா போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும், கடல் கடந்து வெளிவரும் மலேசிய இதழான “நம்பிக்கை“ மாத இதழிலும் எழுத்துப் பணியாற்றி வருபவர். ஆணரத்தை நெருங்கும் சமூக, ஆன்மிக, அரசியல் மற்றும் செய்திக்கட்டுரைகளும், ஏராளமான சிறுவர் தொடர்களும் இவரது இலக்கிய ஆர்வத்துக்கு சாட்சி, “தம்பி-தங்கைக்கு இஸ்லாம்” (பகுதி – 1, பகுதி – 2), “அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்”, “சின்னஞ்சிறுவர்கள் சிந்திக்க சிலகதைகள்” ஆகிய சிறுவர் நூல்களும், “யூஸஃபும் – சகோதரர்களும்” என்ற மொழியாக்க நூலும், “தகவல் களஞ்சியம்” என்ற அறிவியல் நூலும் இவரது முக்கியமான படைப்புகள். சிறுவர்களுக்கான இவரது நூல் ஒன்று சிங்கள மொழியிலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. “நல்லொழுக்க அடிப்படையிலான வாழ்க்கையும்” சமூக நல்லிணக்கமுமே இவரது எழுத்தாணியின் லட்சியம்.
Reviews
There are no reviews yet.