உலக வரலாற்றின் பக்கங்களை நாம் புரட்டிப் பார்த்தோமானால் அவற்றில் நாம் சிறிய மனிதர்களையும் பார்க்கிறோம். நடுத்தர மனிதர்களையும் பார்க்கிறோம். பெரிய மனிதர்களையும் பார்க்கிறோம். பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்கள் ஆனதற்கான காரணம் அவர்கள் சோதனை நேரத்தில் சோதி உருவாகத் திகழ்ந்து சாதனை புரிந்தது தான் என்ற உண்மையை நாம் அறியலாம் . அத்தகு வேளையில் அவர்களின் மனிதத்துவம் ஒளிர்வது போன்று வேறு எத்தகு வேளையிலும் ஒளிர்வதில்லை. அவர்களின் வாழ்வில் அக்காலை பளிச்சிடும் சில நிகழ்ச்சிகளை அவர்களை வாழ்வுச் சிகரத்தில் ஏற்றி வைத்து அவர்களுக்கு இறவாப் பெருவாழ்வு நல்குகிறது. அத்தகு நிகழ்ச்சிகளே வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறித்துப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருங்காலத் தலைமுறையினருக்கு சொத்து, சுகம் ஆகவும் விட்டு செல்லப்பட்டுள்ளன.
அத்தகு நிகழ்ச்சிகளை தேடிக் கண்டுபிடித்துத் தான் நான் இந்நூலை எழுதியுள்ளேன் அவை நம் உணர்வுக்கு உணவாகவும் அறிவுக்கு விருந்தாகவும் பார்வைக்கு ஒளியாகவும் பாதைக்கு விளக்காகும் வாழ்வுக்கு வழிகாட்டியாகவும் வரலாற்றுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
“பெரியார்களின் வரலாறுகள் நம்முன் இருக்கின்றன அவற்றை படித்து நாமும் நம்முடைய வாழ்வைப் பெருமை உடைத்ததாக ஆக்கிக் கொள்ளலாம் “என்று ஒரு கவிஞன் கூறினான். அவனுடைய இந்த பொய்யா மொழியை மெய்ப்பிக்கும் முறையில் நாமும் இந்நூலில் பளிச்சிடும் பெரியார்களின் நற்பண்புகளை நம்முடையவையாக ஆக்கி நம்முடைய வாழ்வையும் மாண்பையும் மதிப்பு மிகுந்த மகோன்னத வாழ்வாக ஆக்கிக் கொள்வோமாக.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் இந்நூலின் முன்னுரையில் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.