யூசுப்-சுலைகா என்ற பெயரைப் பார்த்துவிட்டு ஏதோ இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது.
இது மொழியால் தமிழ்க் காப்பியம்;
உணர்ச்சியினால் காதற் காப்பியம்;
பண்பினால் மனிதக் காப்பியம்;
அறத்தினால் அமர காவியம்;
இந்தக் காப்பியம் காதற் காப்பியமே என்றாலும் இது ஒரு கற்பனைக் காப்பியம் அன்று. யூசுப்-சுலைகா என்ற இருவரையும் பற்றி திருக்குரானும் கூறுகிறது, விவிலியமும் கூறுகிறது. இப்படிக் கூறப்படுவதன் காரணமாக, இது இறைவனே எடுத்துக் கூறும் சரித்திர நிகழ்ச்சியாக அமைந்து மக்கள் அனைவருக்கும் படிப்பினைகள் தரும் சரித்திரச் சான்றாகவே ஆகி விடுகிறது.
கவிஞர் சாரணபாஸ்கரனார் மேற்கொண்ட இந்தப் பணி மிகவும் கடினமானது. திருமறை கூறும் இக்கதையின் நிகழ்ச்சிகளுக்கு காப்பிய வடிவம் கொடுத்தாக வேண்டும். இது ஒரு கூரிய கத்தியின்மேல் நடப்பது போன்றது. இந்தச் சாதனையைக் கவிஞர் மிக வெற்றிகரமாய்ச் செய்து முடித்திருக்கிறார். பாத்திரங்களின் பண்புகளையும் அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் கவிஞர் தம் திறமை முழுவதையும் காட்டியிருக்கிறார். அதே சமயத்தில் யூசுப் ஒரு நபி என்பதையும் சுலைகா அந்த நபிக்கு மனைவியாகப் போகிறவர் என்பதையும் கவிஞர் மறந்து விடவில்லை என்று நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்கள் இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.