அண்ணாந்து பார்க்க இவர் அண்ணாவும் அல்ல, கரும சிந்தனையோடு நோக்க இவர் கருணாநிதியும் அல்ல. பின் இவர் யார்?
கூர் தீட்டிய திராவிடக் கொம்புடன் இந்தியத் தரணியெங்கும் பிளிறிக் கொண்டு பவனி வரும் சமூக நீதிப் பெரு வேளமாக மு.க. ஸ்டாலினின் இமய பிம்பம், கம்பீரத் தோற்றம் தரித்துள்ள பொற்காலம் இது. ஐம்பது ஆண்டு தி.மு.க. தலைமை, கலைஞர் எனும் திராவிடப் பெரும் விருட்சம். சூரிய கிரகணத்துக்குள் தன் ஆயுளை ஒளித்துக் கொண்டபோது அந்த மறைவு ஒரு மாயை என்று, யாவற்றையும் தன் கருவறைக்குள் உருத்தாங்கிய திராவிடச் சூரியனாகப் பேரொளி பரப்பி எழுந்து நிற்கிறது மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி.
‘தலைவரே என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை இப்போது அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே’ என்று உருகிய உருக்கத்தில் மு.க. ஸ்டாலின் பிம்பம் இன்று இமய கம்பீரமாகத் திராவிடத் தொண்டர்கள் முன்னே எழுந்து நிற்கும் ஈர நெகிழ்ச்சியான காட்சியை அரசியல் களம் என்றென்றும் தங்கப் பேழையைத் தாங்கிப் பாதுகாத்து வைத்திருக்கிறது. இன்றைய இந்தியாவின் சக்தி மிகுந்த ஆளுமைகளின் பட்டியலில் முன்னிலைக்கு வந்து நிற்க மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தத் திராவிட நெருப்பாற்றில் நீந்திய தொலைவு நீளமானது என்பதை இந்நூல் ஓங்கி ஒலிக்கிறது.
Reviews
There are no reviews yet.