“குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் ஆவர். அந்த அமானிதத்தை நல்ல முறையில் காக்கும் கடமை, வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு. இந்தக் கடமையில் பெற்றோர் தவறும் போது, பெற்றோருக்கும் பாதகம் நேரும், குழந்தைகளுக்கும் பாதகம் நேரும்.
இருவரும் அல்லாஹ்வின் தண்டனையைப் பெற வேண்டி இருக்கும். பெற்றோர் கடமை தவறியதற்காக, குழந்தைகள் தவறு செய்ததற்காக. இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: “விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், மனிதர்களும், கற்களும், எரிபொருள்களாக ஆகக்கூடிய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்!”
இந்த ஆபத்து இருவருக்கும் ஏற்படாமல் இருக்க பெற்றோர் குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தவேண்டும், குழந்தைகளிடம் நல்ல குண ஒழுக்கங்களை உண்டு பண்ண வேண்டும். இதனைப் பெற்றோர் தாமும் செய்ய வேண்டும், இதனைச் செய்யும் நூல்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
‘எங்கே இந்தக் காலத்துப் பிள்ளைகள் இதையெல்லாம் படிக்கப் போகின்றனர்? இதில் கூறப்பட்டிருக்கிற படியெல்லாம் நடக்கப் போகின்றனர்?’ என்று பெற்றோர்கள் கூறிவிடக்கூடாது. இம்மாதிரி நூல்களைக் குழந்தைகள் படித்தால், அவற்றில் கூறப்பட்டிருப்பவை குழந்தைகளின் மனதில் நல்ல விளைவை உண்டு பண்ணாமல் இராது.
ஒரு பொன்மொழியால் வாழ்வில் உயர்ந்தவர் வரலாறு பல உண்டு. இந்நூலில் அல்லாஹ்வின் வேத உரைகளும் அவன் தூதரின் போத உரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளின் ஒழுக்கத்தை உருவாக்க வல்லவை, அவர்களின் வாழ்வை சீராக்க கூடியவை. அவற்றில் ஒன்றை ஒருவர் பின்பற்றினாலும், அவற்றைப் பின்பற்றி ஒருவர் உயர்ந்தாலும் நான் மகிழ்வேன்; அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவேன்” என்று இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.எம்.முகமது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.