முஸ்லிம் சட்டம் என்கிற இந்த நூலை நான் முழுவதும் படித்தேன். அதில் பேராசிரியர் கலாம் அவர்கள் முஸ்லிம் என்பவர் யார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு ஆதாரங்களுடன் கூடிய பதிலை அளித்து ஷரியத் என்றால் பாதை / சட்டம் / நேரிய பாதை என்ற அதன் உள் அர்த்தத்தையும் செவ்வனே விளக்கியிருக்கிறார். Muslims Personal Law என்று அழைப்பது பொருத்தமாக இருக்காது. ”முஸ்லிம் சட்டம்” என்று சொன்னால் தான் சொல்லின் அர்த்தம் பிரசித்தம் ஆகும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.
இந்த முஸ்லிம் சட்டத்தின் அடிப்படை, திருக்குர்ஆனையும், பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீதுகளையும், சஹாபாக்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாக கொண்டது என்பதை திறம்பட விளக்கியிருக்கிறார். அவ்வாறு விளக்குகின்ற போது, திருக்குர்ஆனில் அமைந்துள்ள 6666 வசனங்களில் 600க்கும் மேற்பட்ட வசனங்களில் துல்லியமான சட்ட மூலாதாரக் கருத்துக்கள் நிறைந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்ற மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி எப். எம். இப்ராஹிம் கலிஃபுல்லா அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.