அறிவு – சிற்றறிவு, பேரறிவு, மெய்யறிவு பகுத்தறிவு, பொது அறிவு என பல வகைப்படும்.
சிற்றறிவு – சிறு அறிவு, சிறு விஷயங்களையே அறிந்தது .
பேரறிவு – பெரிய பரந்த அறிவு, நிறைய விஷயங்களை அறிந்தது.
மெய்யறிவு– அறிந்திருக்கும் பலவற்றிலும் உள்ள உண்மைகளைக் கண்டு உணரக்கூடிய அறிவு.
பகுத்தறிவு- இது சரியா அல்லது தவறா ? இது நன்மையா அல்லது தீமையா ? இது ஏற்றுக்கொள்ள கூடியதா அல்லது தள்ளத் தக்கது?
இது பொருந்துமா அல்லது பொருந்தாதா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து, ஆராய்ந்து பார்த்து, ஒரு நல்ல தெளிவை உண்டாக்க கூடிய அறிவு .
பொது அறிவு- எல்லோரும் பொதுவாகப் பலவற்றையும் விரிவான முறையில் அறிந்துள்ள இந்த அறிவுக்கு எல்லையே இல்லை.
படித்துக்கொண்டே இருக்கும் ஒருவன் கண்களையும் இதயத்தையும் விழிப்பாக்கிக்
கொண்டு, அனுபவங்களைத் தேடிக்கொண்டே இருக்கும் ஒருவன் ஊர் ஊராகவும், நாடு நாடாகவும் சுற்றித் திரிந்து செய்துகொண்டே இருக்கும் ஒருவன் ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டு, தன்னுடைய பொது அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்.
நாலும் தெரிந்தவன் என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன? எல்லாம் தெரிந்தவன் என்று பொருள்.
‘ மாணவர்களுக்கான பொது அறிவுப் பெட்டகம் ‘ என்ற இந்த நூல் ஒரு மாணவன் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் உள்ளடக்கியதாக, அறிந்துகொண்டால், அறிஞர் மத்தியில் அவனை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் நாலும் தெரிந்தவன் ஆக்குகிற ஆற்றல் மிக்கதாகத் திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் விதத்தில் இந்நூலை எழுதி இருக்கிறார் திரு எடையூர் மதிவாணன் அவர்கள்.
Reviews
There are no reviews yet.