ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.
இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.
அறிஞர் அண்ணா¸ ப.ஜீவானந்தம்¸ பாரதிதாசன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவர்¸ பாரதிதாசனின் முதல் தொகுதி வெளிவரத் தூண்டுகோலாய் இருந்தார். மேலும்¸ அண்ணாவின் திராவிட நாடு ஏட்டுக்கும் பல வகையில் ஒத்துழைப்பத் தந்தவர்.
ருஷ்ய புரட்சி பற்றி தமிழில் முதல் நூல் எழுதிய மஹதி¸ மறைந்து கிடந்த தமிழக இஸ்லாமிய வரலாற்றுப் புதையலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார்.
ஐம்பதுகளில் இஸ்லாமியச் சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் எனப் போற்றப்படும் மஹதி¸ பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுதி இது.
Reviews
There are no reviews yet.