அமெரிக்க வெண் மாளிகையை அணி செய்த அனைவருள்ளும் அதிகப் புகழுக்குரியவரும் இயேசு நாதருக்கு அடுத்தபடியாக அமெரிக்க மக்களால் அதிகம் மதிக்கப்படுப வருபவருமான ஆபிரகாம் லிங்கன், அடர்ந்த காட்டின் நடுவே இருந்த சிறு குடிலில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தார். மரம் வெற்றியும் படகோட்டியும் பிழைத்த அவர் பின்னர் பெரிய வழக்கறிஞர் ஆனார். முடிவில் முயற்சியாலும் உழைப்பாலும் அமெரிக்கத் தலைவர் பதவியையும் அடைந்தார்.
அடிமைமுறையை நஞ்சன வெறுத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் அடிமை முறையை விரும்பிய தென்னாடுகள் வடநாட்டிலிருந்து தாமாகப் பிரியத் தொடங்கின. ஐக்கியத்தைக் காக்கவும் அடிமை முறையை அழிக்கவும் தென்னாட்டவர் மீது ஆபிரகாம் லிங்கன் போர் துவங்கினார். இறுதியில் வெற்றி பெற்று அடிமை முறையை அழித்தொழிக்க சட்டம் கொணர்ந்தார்.
அம்மா மனிதனின் வாழ்வும் இன் குணமும் இரக்க உணர்ச்சியும் மனிதத் தன்மையும் நம் மாணவர்க்கு அரிய வழிகாட்டியாய் அமையும்.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் அப்துர் ரஹீம் அவர்கள் இந்நூலின் முன்னுரையில் கூறுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.