“என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.”
உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பூனைகளை மட்டுமல்ல, புவியெங்கும் போரிட்டு வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் செங்கிஸ்கான் கல்லறையில் புதைக்க முடிவெடுத்தனர்.
செங்கிஸ்கான் மரணத்தைப் போலவே அவர்ர் கல்லறை புதையல் ரகசியமும் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிற பரம ரகசியமாகவே இருந்து வருகிறது.
செங்கிஸ்கான் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் என்று பொருள். கருவில் இருக்கும் சிசுவையும் கதிகலங்கச் செய்யும் அளவுக்கு மங்கோலியர் என்றால் கிலி கொள்ளச் செய்த வரலாறு மறக்க முடியாத உண்மை!
Reviews
There are no reviews yet.