பலருக்கும் நாம் தெரிந்திருப்பதால் நம் நினைவு வரும்போது பிறர் மனத்தில் எழும் பெரும் மதிப்பே புகழ் என்பது. அதுவே பெற்றிருக்கத் தக்கதும், பெற்றிருக்க வேண்டுமென விரும்பத் தக்கதுமாகும். அதனால் தான் தோன்றின் புகழொடு தோன்ற வேண்டும் எனவும், இசைபட வாழ வேண்டும் எனவும் ஆன்றோர்கள் கூறினாற்கள். வாழ்வில் புகழ் பெற இயலா ஒருவன் பிறக்கவே அருகதை அற்றவன் என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகை.
இவ்விதப் புகழைப் பெற்று மக்களின் மதிப்பில் உயர வேண்டுமானால் நாம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் மதிப்பில் தாழ்ந்து போகாமல் இருக்க சில எச்சரிக்கைகளையும் மக்கள் மதிப்பில் உயர்வதற்கான பல ஆலோசனைகளையும் இந்நூலில் காணலாம். அவை மிகவும் வெற்றிகரமானவை. அவற்றை உறுதியுடன் பின்பற்றின் பேரும் புகழும் பெருவாழ்வும் நிச்சயம் பெற முடியும்.
Reviews
There are no reviews yet.