பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘பேனா மினார’ எனும் இந்நூலின் அணிந்துரையில் மு.மேத்தா மற்றும் நாகூர் ரூமி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
தம்பி அப்துல் காதர் அவர்கள் பெருமை பல பெற்ற பேராசிரியர். ஊடகங்கள் அனைத்திலும் உலா வரும் ஓராசிரியர்! அவருடைய கவிதைகள் சில சமயங்களில் சொற்களின் சூறாவளி!
சில சமயங்களில் வார்த்தைகளின் வசந்தம்!
கர்ஜிக்கும் கவிமுரசு அப்துல் காதர் அவர்களின் பேனா மினார் நம் முன் பிரகாசிக்கிறது. பேரரசன் கட்டிய குதுப்மினார் நின்ற இடத்தில் மட்டும்தான் பிரகாசிக்கும். பேராசிரியர் கட்டிய பேனா மினார் சென்ற இடமெல்லாம் பிரகாசிக்கும்! ஜெயிக்கும்!
-மு.மேத்தா
அண்ணன் அப்துல் காதரின் சிந்தனை கவிதையால் ஆனது. அதனால் தான் முரணழகின் உச்சங்களை அவரால் இவ்வளவு எளிதாகத் தொட முடிகிறது. அவரின் கவிதைகளில் சந்தம் விளையாடும். பல கவிதைகள் உங்களிடம் அவர் நேரிடையாக ஒலி பெருக்கியைக் கையில் பிடித்துப் பேசுவதைப் போலவே இருக்கும். ஆனால் எளிமையாகத் தோன்றும்.
-நாகூர் ரூமி
Reviews
There are no reviews yet.