ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.
இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.
மஹதியின் அன்னையார் அஸீஸா பேகம் ஆற்காட்டு நவாப் முகமதலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான் இவருடைய புதல்வராவார்.
பெருஞ்சாதனை புரிந்த பெருமானாரின் பிரியத் தோழர்கள் சிலருடைய வரலாற்றசை சுவையாக¸ சுருக்கமாகத் தருகிறார் அறிஞர் மஹதி அவர்கள் எழுதிய “பெருமானாரின் பிரியத் தோழர்கள்” என்னும் இந்நூலில்.
Reviews
There are no reviews yet.