மாணவ நாள்களிலேயே மயக்கும் தமிழால்
என் மனம்கவர்ந்த கவிதைக்காரர் அன்பின்தம்பி
ஆரூர் புதியவன்.
கவியரங்க மேடைகளில்
கருத்துமிக்க… கவித்துவமிக்க
தன் ஆளுமையால் அவையோரை ஈர்த்தவர்.
அன்று
சென்னையில்
கல்லூரியில் படிக்க வந்த புதியவன்
இன்று
கல்லூரியில் பாடம் நடத்துகிற புதியவன்.
என்றும் புதியவனாய் இயங்குகிற தம்பி
இந்த காதல் கவிதைகளில் பூக்களால் பேசுகிற
புதியவனாகவும் இயங்கி இருக்கிறார்.
ஆலங்கட்டி மழை பெய்கிற சாலையில்
நடப்பது போல் இருக்கிறது.. இந்த
நூலுக்குள்ளான பயணம்.
சின்னச் சின்ன கவிதைகள். சிலிர்க்க
வைக்கும் சிந்தனைகள்.
நான் ஆடையாகப் பிறந்திருந்தால்
நீ
“கட்டிக் கொண்டு இருப்பாய்
மனிதனாகப் பிறந்தேன்.
துவைத்துக் கொண்டிருக்கிறாய்.“
க..ச..ட..த..ப..ற..
வல்லினம்
அதையே
நீ சொன்னால்
மெல்லினம்.
இப்படி இளம்பருவத்துக் காதலர்களுக்கான
கற்கண்டுத்துளிகளாய் காதல்கவிதைகள் தந்துள்ள
ஆரூர் புதியவனுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
இவ்வாறு கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.