இஸ்லாம் இந்த உலகில் எப்படி பரவியது என்று தொடர் கட்டுரைகள் எழுதலாமே என்று எனக்கு முதன்முதலில் சொன்னவர், கேட்டுக் கொண்டவர் சமநிலைச் சமுதாயம் பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் ஜாஃபர் அவர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி நானும் எழுத ஆரம்பித்தேன். முதலில் பெருமானார் காலத்திலிருந்து தொடங்கி, பின்னர் நேர்வழி காட்டப் பட்ட நான்கு கலீபாக்கள் காலம், பின்னர் வந்த கலிபாக்கள் காலம் என்று இன்றுவரை உலகில் இஸ்லாம் பரவிய விதம் பற்றி எழுத எண்ணம் கொண்டிருந்தேன்.
அதில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் எப்படி பரவியது என்று எழுதிக் கொண்டிருந்த போதே சமநிலைச் சமுதாயம் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் நின்று போனது. அதன் பிறகு நானும் எழுத முடியாமல் போனது. எழுதியவரை முதல் பாகமாக வெளிக்கொண்டு வரலாம் என்ற எண்ணம் இருந்தது. அதை அங்கீகரித்து செய்யலாமே என்று ஊக்கம் கொடுத்தவர் சகோதரர் யுனிவர்ஸல்பப்ளிக் ஷாஜஹான் அவர்கள்.
புறாக்கள் கட்டிய மாளிகை இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் 1 வெளிவந்து தங்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த பாகங்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.
Reviews
There are no reviews yet.