பாளையில்
பூக்கள் மலர்கின்றன.
அந்தச் சோலைக்குப் பெயர்
பஷீர்.
இந்தச் சோலையில்
மனங்களையெல்லாம் கவரும்
மதுரை மல்லி.
மனம் நினைக்கும்
மணம் தரும்
மனோரஞ்சிதம்
ஆயுதபாணியான
ரோஜா
எல்லாம் இருக்கின்றன
வண்டுகளே!
வாருங்கள்.
இவ்வாறு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் மஸ்கட் மு. பஷீர் எழுதிய
பாலைப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதிக்கு அளித்த அணிந்துரையில் கூறுகிறார்.
அயல் மண்ணில் பணிபுரியும் தமிழர்களுக்குத் தான் தாய்மொழியின் மீது அதிக பற்றும், ஆர்வமும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு மற்றவர்கள் வைப்பது கூட தமிழில் இருந்தால் வாழ்த்துவது போலத் தோன்றும். அவர்களில் ஒருவராய் தமிழை நேசிக்கும் மஸ்கட் பஷீர் திருவள்ளுவர் மீதும் தமிழ் மீதும் குமரி மண் மீதும் தீராத பற்றுள்ளவர்.
அவருடைய பாலைப் பூக்கள் கவிதைத் தொகுதியை என்னிடம் கொடுத்து நான் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அந்தத் தொகுப்பு முழுவதும் துள்ளிக்குதிக்கும் சுவையும், சுவாரஸ்யமும்…
அவள் கண்ணில் விழுந்த
துரும்பை எடுத்தேன்;
நான் விழுந்தேன்!
என்ற முதல் கவிதையே அற்புதம்
கணினியைப் பற்றிய கவிதையில்;
பெண்ணுக்கு வயதாகும்
நாளாக நாளாக!
இந்தக் குமரிக்கு மட்டும்
மேனி இளசாகும் நாள் போகப்போக!
மெத்தை உடல் கொண்டாள்
எண்பதுகளில்…
சிக்“கென“ இடை கண்டாள்
இந்நாளில்!
என அவர் ஒப்பிடும் விதம் நம்மை கவர்கிறது.
மஸ்கட் மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற இந்நூலிற்கு
முனைவர் வெ. இறையன்பு I A S அவர்கள் எழுதிய அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.