இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது.
ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை ஏற்படுத்தி டில்லியின் வெப்பம் மிகுந்த இரவில் கருத்து வேறுபாடுகளை உசுப்பி விட்டுவிட்டது.
கடும் பிடிவாதக்காரர் என்று கூறப்பட்ட முகமது அலி ஜின்னா தான் போட்ட சபதப்படி பாகிஸ்தானை அடைந்துவிட்டார்.
“பாகிஸ்தானை பிரித்துக் கொடுப்பதே சரியான முடிவு. அதை எதிர்ப்பதால் என்ன பயன்? தினம் தினமும் இந்து – முஸ்லீம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள வேண்டுமா? இந்த உள்நாட்டுப் போருக்கு நாமே வித்திடலாமா?” என்று ஒரு கட்டத்தில் படேல் கேட்டார்.
படேலின் உரைக்குப்பின் பிரிவினைத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்திய ஒற்றுமைக்கும் வைஸ்ராய்க்கும் இடையே ஓர் அசையாத் தடையாக இருந்து வந்த முகமது அலி ஜின்னா, இயற்கை விதித்த மரண தண்டனையை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருந்தார் என்ற உண்மை லூயி மவுண்ட் பேட்டனுக்கோ, நேருவுக்கோ, காந்திக்கோ, படேலுக்கோ தெரியாது.
பலவீனமான நுரையீரல் அமைப்பு காரணமாக வாழ்நாள் முழுவதுமே அவதிப்பட்டுக் கொண்டிருந்தபடி தமது அரசியல் பயணத்தில் இருந்தவர்தாம் ஜின்னா.
ஜின்னாவைப் பற்றி இன்னும் அந்தரங்கமாக ஏராளமான வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் ஜெகதா அவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளார். வரலாறு குறித்த விரிவான வாசகர் பார்வைக்கு இந்நூல் வழித்துணையாக அமையும் என்று எண்ணுகிறேன்.
- எஸ்.எஸ். ஷாஜஹான்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
Reviews
There are no reviews yet.