Skip to content

பறவையின் பாதை

110.00

அப்துல் ரகுமான் அவர்கள் இந்நூலுக்காக எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:

தேவ கிரணங்கள் தீண்டும்போது
படிமங்கள்
பூக்களாய் மலர்கின்றன

அழகான படிமங்கள்
அர்த்த கர்ப்பமுள்ள
படிமங்கள்

இந்தத் தொகுதி
படிமங்களின் பூங்கா
மலர்களின்
வடிவம் வேறாக இருக்கலாம்
வண்ணம் வேறாக இருக்கலாம்
வாசம் வேறாக இருக்கலாம்

ஆனால்
தேன் ஒன்றுதான்

மேலும்
இந்தப் பூக்களின்
வேர்கள்
‘பூமி’க்கு அடியில்
அந்தரங்க உறவு
கொண்டவை

இப்போதெல்லாம்
என்னால்
இப்படித்தான்
எழுத முடிகிறது

இந்தத் தொகுதியில்
பெரும்பாலும்
‘சூஃபி’க் கவிதைகள்

அந்த வகையில்
இது தமிழில்
முதல் ‘சூஃபி’ப்
புதுக் கவிதைத் தொகுதி

புதுக் கவிதையில்
இது ஒரு புதிய பரிமாணம்
புதிய பரிணாமம்