ஓராயிரம் சொற்களில் உரைக்கத்தக்க உண்மைகள் எல்லாம் ஐந்தாறு சொற்களில் அமைந்து சுடர்விடும் பழமொழிகளாகிய அறிவின் இலக்கியம் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்றையேனும் உறுதியோடு பின்பற்றினால் துளி அளவாவது பயன் உண்டாவது உறுதியாகும்.
உதாரணத்திற்கு நம்பிக்கை:
ஒரு கெட்ட உண்மையை விட ஒரு நல்ல நம்பிக்கை மேலானதாகும்.
நம்பிக்கைதான் ஏழைகளின் உணவு.
நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கு ஏற்படும் ஏமாற்றங்களுக்கு அவன் இதயமே வெடித்துப் போய்விடாதா?
நம்பினால் பெறலாம்.
நம்பிக்கை மெதுவாக வளரும் செடியாகும்.
உயிர் இருக்கும் வரை நம்பிக்கையை இழக்க வேண்டாம்.
எங்கு நம்பிக்கை இல்லையோ அங்கு முயற்சி இருக்காது.
Reviews
There are no reviews yet.