ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள¸ முதல் தேவை நம்பிக்கைதான். நம்மால் பாடம் செய்ய இயலும்; நாம் பாடம் செய்திருக்கிறோம்; தடங்கல் ஏற்பட எதுவும் கிடையாது என்னும் நம்பிக்கை அவசியம்.
இன்றைய கல்விச் சூழலில் மாணவ¸ மாணவியருக்கு நினைவாற்றல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நினைவாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்கிறது இந்நூல்.
நினைவாற்றல் என்கிற இந்த அரிய செல்வத்தை¸ மூளையின் அற்புதத்தை¸ மனத்தின் களஞ்சியத்தை ஆண்டவன் அளித்ததற்கு மேல் அதிகம் பெற முடியாது என்று சிலரும்¸ முனைந்து சில முறைகளை பின்பற்றினால் அதனை அதிகப்படுத்திக கொள்ளலாம் என்று பலரும் கூறுகின்றார்கள். பிறப்போடு வரும் திறன் ஒரு சிலவற்றுள் நினைவுத்திறனும் ஒன்றென்பதை ஒப்புக் கொண்டாலும் முயற்சி மூலம் பெருக்கிக் கொள்ள முடிந்த திறனே அது என்பது நம் கொள்கையாகும். அந்தக் கொள்கையில் பிறந்ததுதான் இந்த நூல்.
Reviews
There are no reviews yet.