எம் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது நாம் அனைவரும் ஸலாமையும் ஸலவாத்தையும் அதிகமதிகமாக ஓதி இறைவனின் பேரருளுக்கும்
எம் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிவுரைக்கும் உரியவர்களாக ஆகவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இதனைத் தமிழ் கூறும் நல்லுலகு வாழ் முஸ்லிம்களின் முன் படைக்கின்றேன். இதிலுள்ள ஆரமுதினும் மேலான ஸலவாத்துக்களில் நாம் நம்முடைய நாவையும் உள்ளத்தையும் தோய்த்துத் தோய்த்து வருவோமாயின் மகாகவி இக்பால் தம்முடைய
ஜவாபெ ஷிக்வாவில் பாடியுள்ள வண்ணம்
‘நீ முஹம்மதின் மீது அதிகமதிகம் அன்பு செலுத்துபவராக ஆகிவிடின்
நாம் நம்மையே உனக்கு அழித்து விடுவோம்.
இந்த உலகம் மட்டுமன்று, விதிப் பலகையும் விதியை எழுதும் துர்க்கையும் உன் வயமாகிவிடும்’
என்ற நன்மாராயம் நாம் இறைவனிடமிருந்து செவியுறுவோம் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அப்துற்-றஹீம் அவர்கள் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.