1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன்.
சங்க இலக்கியத்திலேயே புதுக்கவிதை கூறுகள் தோன்றிவிட்டன என்பதை முதலிரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன.
பழங்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் கருப்பையாக இருந்துவரும் பைபிளின் சிறப்பை ஒரு கட்டுரை உணர்த்துகிறது.
இந்திய, மேனாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு புதுக்கவிதையின் பண்புகளைச் சில கட்டுரைகள் விவரிக்கின்றன.
தமிழுக்கு இதுவரை அறிமுகம் ஆகாத கடுமுனைப்பியம் (ultraism), படைப்பியம் (creationism) ஆகியவற்றை இரு கட்டுரைகள் அறிமுகப்படுத்துகின்றன.
இந்தக் கட்டுரைகள் புதுக்கவிதையின் சில பண்புகளையும், பரிமாணங்களையும் காட்ட முயல்கின்றன. இவ்வாறு நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.
Reviews
There are no reviews yet.