வாருங்கள்… வாஞ்சைமிகு வாசக நெஞ்சங்களே. இதோ பாருங்கள்… அந்த ஓலைக்குடிசையிலே தன் துணைவியாருடன் துயில் கொள்ளும் அந்த அரேபியாவின் அதிபதி, விடு என்னை… நான் இறைவனை வணங்கப்போகிறேன் என்று விருட்டென எழுந்து தொழுகைக்குத் தயாராகின்றார்.
தக்பீர் கட்டி நீண்ட நேரம் மணிக்கணக்கில் நின்று மாமறையை ஓதுகின்றார். குனிந்து ருகூஃ செய்துவிட்டு தரைக்கு வருகின்றார். தலை வைப்பதற்கு இடமில்லை. தன் துணைவியின் கால்களில் கை வைக்கிறார். அவர் கால்களைத் தூக்கி இடம் கொடுத்தபிறகே தலை வைக்க முடிகின்றது. ஏன்? ஏன்? அந்த வீட்டில் அவ்வளவுதான் இடம்… ஒருவர் படுத்திருந்தால் மற்றவர் தலை வைத்து சஜ்தா செய்ய இடம் போதாது. சுமார் 6 அடி அகலம் கூட இல்லாத வீட்டில் வசித்த அந்தப் பேரரசரின் பெருவாழ்வு பற்றிய ஒரு சிறு நூல்தான் உங்கள் பொற்கரங்களில் மின்னுகின்றது.
இவ்வுலகம், மறுவுலகம், ஆன்மிகம், அரசியல் – அருளியல் பொருளியல், ஆண்-பெண், இளைஞர்-முதியோர் என்றின்றி திண்ணைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தேவையான அனைத்துக் கலைகளிலும் எல்லாத் துறைகளிலும் தன் பேன முனையால் பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்த பேரறிஞர் MRM அப்துற்-றஹீம், B.A., அவர்களின் “யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்” எனும் பெருமைமிக்க பதிப்பகம் அடியேனின் சிலமைத் துளிகளை முத்து மாலையாக்கி மக்களுக்கு வழங்க முன் வந்ததை இறைவன் எனக்குச் செய்த பேரருளாகவே கருதுகின்றேன், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.