வாழ்க்கை நிகழ்வுகளில் தொடங்கி வரலாறு, திருக்குர்ஆன், நபிமொழிகளின் அறவுரைகள், வழிமுறைகள் என விரிகிறது இந்நூல்.
“வட்டி“ என்பதற்கு வேர்ச்சொல் எது வெனத் தெரியவில்லை. ஆனால், வட்டம் என்ற சொல்லிலிருந்து அது பிறந்திருக்க வேண்டும்.
வட்டம் மானுட வரலாற்றில் கண்டு பிடிக்கப்பட்ட முக்கியமான வடிவம். அதுவே சுழியமாக(சைபர்)வும் உலா வருகிறது. கணிதத்தின் தொடக்கங்களில் சுழியத்தின் பங்கு முக்கியமானது. எண்களுக்குத் தோற்றுவாயாய் சுழியம் இருந்தாலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கு முன் வரும் சுழியம் வெறும் சுழியமே. எண்களுக்குப் பிக் வரும் போதுதான் அது மதிப்படைகிறது.
தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி காலப்போக்கில் மக்களைத் தொட்டு தொடர்ந்திருக்கிறது. தொட்டுக் கைகுலுக்கிய அது மானுட சமுதாயத்தைக் கட்டித் தழுவும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கட்டித் தழுவப்பட்ட பலரும் வாழ்க்கையை இழந்த போதுதான் அதற்குக் காரணம் வட்டி என்னும் “உயிர்க் கொல்லி” என்பதை அறிந்து மருண்டு போனார்கள்.
வட்டியைப்பற்றி ஓரளவு அறிந்துள்ள நீங்கள் மேலும் இந்நூலைப்படித்து அதைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் பணியைக் கட்டாயம் செய்வீர்கள் என உறுதியுடன் நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.