மனிதநேயமும், நல்லிணக்கமும், நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும் மறைந்து விட்ட இக்காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பாக முஸ்லிம்களையே குறிவைத்துத் தாக்கும் இழி நிலை இன்று உள்ளது. உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுக்கள் நாட்டு மக்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைக்காமல் பிளைவு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அனுதினமும் தொடர்கின்றன. இந்த நிலை மாறி, உண்மை வரலாற்றை மக்கள் அறிய வேண்டும் என்பதும், மாவீரர் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே அவர்களின் மாபெரும் வீரமும், தியாகமும் மறைக்கப்பட்டுள்ளது என்ற ஆதங்கமே இந்நூல் வெளிவரக் காரணம்.
இதுவரை மாவீரர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்தும் கூட நுகர்வோர் எண்ணிக்கை நுண்ணியதாகவே உள்ளது. பெரிய அளவில் உள்ள வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கக் காலம் கம்ப்யூட்டர் யுகத்தில் குறைவாகவே உள்ளதால் ஒரு மணி நேரத்தில் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு உண்மையான வீர வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளவே இச்சிறுநூல். நாளேடு , வார, மாத இதழ்களில் வெளியான எனது கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும் .
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் எம். கே. ஜமால் முகமது தனது முன்னுரையில் கூறியிருக்கின்றார்.
Reviews
There are no reviews yet.