Skip to content

தமிழும் கம்பனும்

150.00

சென்னை கம்பன் கழகத் தலைவர் இராம. வீரப்பன் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘தமிழும் கம்பனும்’ என்னும் இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் இவ்வாறு கூறுகிறார்:

தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர் மட்டுமல்ல. வாழ்க்கையோடு இணைந்த உயிர்ப் பண்பாட்டின் நிலைக்களன் என்ற பெருமை உலகில் தமிழுக்கு மட்டுமே உண்டு. அந்தப் பெருமைகளையெல்லாம் கம்பன் தன்னடைய காப்பியத்திலே பல இடங்களில் நிலைநிறுத்தியிருக்கிறான் என்பதை இன்று வரை யாரும் எடுத்துக்காட்டியிராத பல உண்மைகளை திரு.அப்துல் காதர் அவர்கள் இந்த நூலிலே விளக்கியிருக்கிறார்.

அருமைச் சகோதரர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மிகச் சிறந்த இந்த நூலை ஒரு புதிய இலக்கியமாகப் படைத்திருக்கிறார்.