Skip to content

ஜமீலா காத்திருக்கிறாள்(சமூக நாவல்)

170.00

நடந்த ஒன்றைக் கருவாகக் கொள்கிறபோது, கதாப்பாத்திரங்களும் எந்தவிதச் சிக்கலுமின்றிச் சீராக அமைந்து விடும். ஒரு படைப்பின் வெற்றி என்பது பாத்திரப் படைப்பின் சிறப்பில் இருக்கிறது. வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக ஒரு புதினம் அமைந்துவிடக் கூடாது.  பாத்திரங்களின் உணர்ச்சிகளும் அவர்களின் மனவோட்டங்களில் தென்படும் குணச்சித்திரங்களும் ஒரு புதினத்திற்கு உயிர் அளிக்கக்கூடியவை ஆகும்.

 

ஐந்து வயதில் தாயை இழந்து, ஏழு வயதில் தந்தையை இழந்து, தமக்கைகளின் அரவணைப்பில் வளர்ந்து, சிறு வயதிலேயே திருமணமும் நிகழ்ந்து, கணவன் வீட்டிலும் மரண பயத்துடன் வாழ்ந்து, 35 வயதில் கணவனை இழந்து, மந்திரவாதி, போலி சூஃபி ஆகியோரிடம் ஏமார்ந்து, இறுதியில் பெற்ற மகனும் நாகூர் தர்காவிலேயே பல்லாண்டுகள் தங்கிவிட மரணம் மறைந்து நின்று காத்திடும் வேளையில் தலைவி ஜமீலா தன் மகன் வருவானா? மாட்டானா? எனக் காத்திருப்பதனை நிரல்பட அழகுறச் சுவைகூட்டி அருமையான பாத்திரப் படைப்பு கொண்டதாகத் தனது படைப்பைத் தந்திருப்பதில் இதன் ஆசிரியர் ஏவி.எம். நஸமுத்தீன் வெற்றி பெற்றிருக்கிறார், என்று பேராசிரியர் முனைவர் சேமு. மு. முகமதலி அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜமீலா காத்திருக்கிறாள்(சமூக நாவல்)”

Your email address will not be published. Required fields are marked *