புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு? வசனத்தை உடைத்துப் போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம், குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன? உவமை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி, யாரால் நிகழ்ந்தது? புதுக் கவிதையின் வரலாறு என்ன? அதற்கு முக்கியப் பங்களித்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் அமைந்தது இந்நூல்.
“விலங்குகள் இல்லாத கவிதை” என்ற நூலில் (1994) இடம் பெற்றிருந்த சில கட்டுரைகளையும், ஆய்வரங்கங்களுக்காகவும், பத்திரிகைகளுக்காகவும் நான் எழுதிய புதுக்கவிதை தொடர்பான சில கட்டுரைகளையும் இணைத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.
Reviews
There are no reviews yet.