இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சிங்கப்பூரின் அரசியல் சூழ்நிலை பல அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.
மலாயன் ஜனநாயக யூனியன் – Malayan Democratic Union (1945) முற்போக்கு கட்சி – Progressive Party (1947) ¸ தொழிலாளர் முன்னணி – Labour Front, 1954, மக்கள் செயல் கட்சி (PAP) ஆகியவை அவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரின் முதலாவது முதலமைச்சர் டேவிட் மார்ஷல் 1956-ல் பதவி துறந்தார். அடுத்த நிலையில் லிம் இயூஹாக் முதலமைச்சரானார். அவரும் அதிக நாள் நீடிக்கவில்லை. மே 1959 பொதுத் தேர்தலையடுத்து சிங்கப்பூருக்கு சுயாட்சி வழங்கப்பட்டது.
மக்கள் செயல் கட்சி(PAP) 1959 பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து புதிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் அரசாங்கத்தை அமைத்தது¸ சுயாட்சி – அரசாங்க அமைச்சரவை ஜுன் 5-ஆம் தேதி பதவியேற்றது. திரு.லீ குவான் இயூ பிரதமரானார். மலாய்¸ சீனம்¸ தமிழ்¸ ஆங்கிலம் ஆகியவற்றை ஆட்சி மொழியாக்கினார். இதுபோன்று சிங்கப்பூர் பற்றிய பல்வேறு சுவையான தகவல்களை இந்நூலின் ஆசிரியர் ஜே.எம். சாலி அவர்கள் இந்நூலில் விவரித்துள்ளார்.
Reviews
There are no reviews yet.