ஆன்ம ஞானம் பெற விரும்புகிறவர் சூஃபிகளின் வழியை அறிந்திருக்க வேண்டும். சூஃபி வழியை அறிந்தால் இறைவனின் பண்புகளை, செயல்களை, சிறப்புகளை நாம் அறியமுடியும்.
அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பதை ஆன்மிகத்தில் தொடர் பயிற்சி எனலாம். அது சூபிகளின் அறிவுரைகளை, கவிதைகளைப் புரிந்து கொள்வதில் நம்மை இயனன்றவராக்கும். அவை இறைவன் மீது அவர்கள் கொண்ட அன்பையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறவை. அவர்களுடைய வார்த்தைகள் மெய்யறிவை உள்ளடக்கியவை. அவர்களுடைய போதனைகள் இதயங்களில் அறிவை உண்டு பண்ணுகிறவை.
இந்நூல் மனம், வாழ்க்கை,அன்பு, ஆசை, மகிழ்ச்சி பற்றிப் பேசுகிறது. எது உங்கள் வாழ்வை முழுமைப்படுத்தும் என்பதை ஆராய்கிறது. ஜலாலுதீன் ரூமி, அமீர் குஸ்ரு, நிஜாமுத்தீன் அவ்லியா போன்ற அருளாளர்களின் வாழ்க்கையும் இதில் இடம் பெற்றிருக்கிறது ராபியா ஜுனாயிது, சாஅதி போன்ற புனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் சின்னச் சின்ன கதைகள் மூலம் அவர்கள் வழங்கிய கருத்துக்களும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
Reviews
There are no reviews yet.