சிறுவயதில் நம் தாத்தா பாட்டி கதைகளையோ விடுகதைகளையோ சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது! அத்தகைய விடுகதைகள் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதைக் கேட்டால் நாம் உண்மையில் வியப்படைவோம். முன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும் பள்ளிகளில் விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது. இதில் விடுகதைகளை எப்படி விடுவிப்பது? புதியபுதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று சொல்லிக்கொடுக்க விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது.
துருக்கி நாட்டில் பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் மணப்பெண் விடுகதை போடுவாளாம். சரியான விடை கூறுபவனுக்கே பெண் கொடுப்பார்களாம். விடை தெரியாதவன் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளில் விடுகதை விளையாட்டுகளை நடத்துவார்கள். அவர்கள் குழுக்களை அமைத்துக் கொண்டு விளையாடுவார்கள், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும்.
ஹவாய் தீவில் மல்யுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய போட்டிகள் நடைபெறும். அப்போது விடுகதைப் போட்டியும் நடைபெறும். இத்தகைய சிறப்புமிக்க 1008 விடுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன படித்துப் பயன் பெறலாம்.
Reviews
There are no reviews yet.