உணவு வகைகளில் சிறந்தது அசைவ உணவே ஆகும். அது எல்லா மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே அசைவ உணவை சமைக்கத்
தெரிந்திருப்பார் மற்றவர்கள் தங்களுக்கு தெரியாத அசைவ சமையலை வீட்டில் சமைக்காமல் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு அதிகப்படியான பணத்தைச் செலவிட்டு, வயிற்றுக்கோளாறை வாங்கி வருகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த நிலை வேண்டாம்.
‘ சிக்கன் ஸ்பெஷல்’ என்ற இந்நூலில் முஸ்லிம்களின் சமையல் முறைகள், மொகலாயர்கள் சமையல் முறைகள் போன்ற வித்தியாசமான மட்டன் சமையல் முறைகளை எளிய முறையில் தெளிவாக எழுதி இருக்கிறேன்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதன்படி சமைத்துப்
பார்த்து உண்டு, தாங்களும் மகிழ்ந்து தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்வித்து பெருமையடையலாம் . அந்த அளவிற்கு சிறப்பான சிக்கன் சமையல் முறைகள் இதில் கூறப்பட்டுள்ளன.
இந்நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும் . இதை படித்துச் சமைத்து, சுவைத்தால் நான் கூறியது முற்றிலும் உண்மை என்பது விளங்கும்.
இவ்வாறு இதன் ஆசிரியர் பாத்திமா ஷாஜஹான் இந்நூலின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.