உலகமாகிய பேரில்லத்தில் அறிவு விளக்கேந்தி அல்லல் களைய முன் வந்த பெரியார் நால்வரின் பொன் வாழ்வைத் தொகுத்து சரவிளக்கு என்ற பெயருடன் இந்நூலை எழுதியுள்ளார் அப்துற்- றஹீம் அவர்கள்.
வினோபா பாவே:
இவர் பூமிதானப் புரட்சி செய்து உலகமெல்லாம் வியந்தேத்தும் வண்ணம் அகிம்சை முறையில் ஆரும் பணியாற்றிவர்.
ஆல்ப்ரெட் நோபல்
இவர் உலகில் தன்னிகரில்லாத் தனிப்பெரும் பரிசில்களை நிறுவி புகலெழுத்துக்களால் பொறித்துப் போந்த வள்ளல் கோடி செல்வர்.
ஆண்டன் செக்காவ்
ரஷ்ய சிறுகதை மன்னர். எனினும் தோட்ட வேலைக்காரனாக இருப்பதில் இன்பம் கண்டவர். ஏழைகளுக்கு இறங்கிய மகாத்மா.
மெஸ்மர்
அக்காலத்தவரால் தூற்றி நகைக்கப்பட்டு, ஊர்ஊராக விரட்டியடிக்கப்பட்டு, பிற்காலத்தவரால் போற்றிப் புகழப்படும் புதுமை சிந்தனையாளர்.
ஆகிய நால்வரின் வரலாறு ‘சரவிளக்கு’ எனும் இந்நூலில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.