கோடங்கி என்னுடைய இரண்டாவது
கவிதைத் தொகுதி!
வாழ்க்கையில் நான் கண்ட
வாழ்வியலின் வசந்தங்களையும்
விதவிதமான வேதனைகளையும்
வலிக்காமல் சொல்ல வேண்டி ‘கோடங்கி’
வார்த்தைகளால் கவிதைகளாய்ப் பிரசவித்துள்ளேன்.!
‘கோடங்கி’ வாழ்வியலின் எல்லா
கோணங்களிலும் பரிமாணங்களிலும்
குடுகுடுப்பைத் தட்டி
காணும் நிஜங்களைக் கண்முன்னே
கடை விரித்துள்ளான்!
மங்கலான வெளிச்சத்தில்
மங்கிப்போன பார்வைகளால் நாம்
மறந்து போன சமூக அவலங்களையும்
மனம் திறந்து ஒளியேற்றுகிறான்!
அவலங்கள், அருகதையற்றவை என
ஆங்காங்கே தெரிந்தவற்றை ஒதுக்கித்தள்ளாமல்
அவற்றை ஆரத்தழுவி
அழகுமலர் வார்த்தைகளால்
ஆபரணம் சூடி, அணிகலன் பூட்டி
அலசிப் படித்து விமர்சனம் செய்ய
அகம் நிறைந்து தந்துள்ளேன்!
இரைச்சல் நிறைந்த வேக வாழ்வில்
இரக்கமற்று உறைந்து போன மானுட
இதயங்களை இந்தக் கவிதை வரிகளில் சில
இறகுகளாகவோ, ஈட்டிகளாகவோ
இயக்கி எழுப்பி விடுமானால்
இந்தக் கோடங்கிக்கு அதுதான்
இன்பம் தரும் வெற்றியாகும்!
கோடங்கி கவிதைத் தொகுதிக்கு மஸ்கட் மு. பஷீர் எழுதிய முன்னுரை.
Reviews
There are no reviews yet.