தான் சுவைத்த காற்றில் எழுதிய கவிதைகளுக்குக் கவிக்கோ இசையமைத்துள்ள படிவம்தான் “காற்றில் எழுதிய கவிதைகள்”.
09.12.2013 முதல் 10.04.2014 வரை ‘நியூஸ் சைரன்’ என்ற வார இதழில் கவிக்கோ வழங்கிய தொடர் தற்போது நூலாக்கம் பெற்றிருக்கிறது.
உரைநடை ஒரு கரையாய்¸ கவிதை ஒரு கரையாய¸ கரை புரட்டிக் போட்டு ஓடிய மகாநதி கவிக்கோ¸ வளைவு நெளிவுக் கோடுகளால் ஆன வண்ண ஓவியத்திற்கு கவிக்கோ போட்டுள்ளார் கனகச் சட்டம். ஆனால்¸ அந்தச் சட்டம் சட்டையாய்¸ பட்டையாய் இல்லாமல் சிற்ப வேலைப்பாட்டுடன் நுட்பமாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது.
கவிக்கோவின் நானாவிதப் பேனாச் சித்தரிப்பு¸ கிளியோபாத்ராவின் உருவ நிழல் விழுந்ததால் போதையுற்ற நைல் நதி கரையில் மோதும் களிப்புச் சிதறலை நினைவுப்படுத்துகிறது.
இந்நூலுக்கான மதிப்புரையில் கவியருவி அப்துல் காதர் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.