Skip to content

கவலைப்படாதே

90.00

ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்.

கவலையை ஒழித்துப் புது வாழ்வு வாழ வேண்டும் என்னும் தணியாத் தாகம் கொளுந்து விட்டெரியும் ஆசை உள்ளவனாய் நீ இருக்க வேண்டும். அந்த ஆசையை அபிவிருத்தி செய்வது எப்படி?

நீ இந்த நூலைப் படித்து முற்றிலும் பயன்பெற வேண்டுமானால் நீ கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று உன்னுடைய அன்புத் தோழன் என்னும் முறையில் ஆலோசனை கூறுகிறேன். அவ்விதமானால் முதன் முதலில் உன்னிடம் மிகவும் தேவையான பண்பு ஒன்று இருக்கின்றதா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்தப் பண்பு ஒன்று மட்டும் உன்னிடம் இல்லையானால் நீ இந்த நூலைப் படிப்பதற்கு ஆயிரம் சட்ட திட்டங்களை உனக்கே நீ விதித்துக் கொண்ட போதினும் அவற்றால் உனக்கு யாதொரு பலனும் ஏற்படாது. அந்தப் பண்பு தான் என்ன?

கவலையை ஒழித்துப் புது வாழ்வு வாழ வேண்டும் என்னும் தணியாத் தாகம் கொளுந்து விட்டெரியும் ஆசை உள்ளவனாய் நீ இருக்க வேண்டும். அந்த ஆசையை அபிவிருத்தி செய்வது எப்படி?

1. இதில் கூறப்பட்டுள்ள அனுபவ முறைகளைப் பின்பற்றினால் உனக்கேற்படும் நன்மைகளை உனக்கே நீ நினைவுபடுத்திக கொள்: பின்பற்றினால் உன்னுடைய வாழ்வில் எவ்வளவு மகிழ்வு பூத்துக் குலுங்கும் என்பதை உன் மனக்கண்முன் கொண்டு வந்து பார். ‘என்னுடைய மன அமைதி¸ மகிழ்ச்சி¸ உடல்நலம்¸ வருமானம் ஆகிய அனைத்தும் இந்நூலில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நான் பின்பற்றுவதையே பெரும்பாலும் பொறுத்திருக்கின்றன’ என்று உனக்கே திரும்பத் திரும்பக் கூறிக்கொள்.

2. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வேகமாய்ப் படித்துக் கொண்டு செல். ஒரு அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டதும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும். ஆனாலும் அவ்விதம் செய்யாதே. நீ பொழுதுபோக்கிற்காக இந்நூலைப் படிக்கிறாயா என்ன? இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டுமல்லவா? அவ்விதமானால் முன்பு படித்ததைத் திரும்பத் திரும்பப் படி.

3. படிப்பதைச் சற்று நிறுத்தி¸ படித்ததை ஆழ்ந்து சிந்தித்துப் பார். அதிலுள்ள ஆலோசனைகளை எப்பொழுது எவ்விதம் உன்னுடைய வாழ்வில் செயலாற்றலாம் என்று உன்னையே கேட்டுக் கொள்.

4. படிக்கும் பொழுது பேனாவையோ அல்லது சிவப்புப் பென்ஸிலையோ வைத்துக் கொள். நீ பின்பற்றக் கூடிய ஆலோசனைகளை உடனே ‘மார்க்’ பண்ணிக் கொள். அவ்விதம் செய்வாயானால் இந்நூலின் சத்து முழுவதையும் பிரித்து எடுத்தது போல ஆகிவிடும். பின்பு நூலைத் திறந்ததும் ‘மார்க்’ பண்ணப்பட்டவை உன்னுடைய கண்களில் பளிச்சென்று படும்.

5. இந்நூலை நீ முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் ஒரு தடைவை இந்நூலைப் படித்து விட்டால் மட்டும் போதாது. திரும்பத் திரும்பப் படி. இதில்; கூறப்பட்டிருப்பவைகளை உன்னுடைய வாழ்க்கையில் செயலாற்று. அவை உன்னுடைய இரத்தத்தோடு இரத்தமாக ஓடட்டும்.

உன்னுடைய மேஜை மீது இந்நூலை வைத்துக் கொள். கவலைப் பிரச்சனை உன்னை அனுகும்போது உன்னுடைய கண்கள் அதில் பாயட்டும். ‘கவலைப்படாதே!’ என்று அசரீரி முலம் யாரோ ஒருவர் உனக்கு ஆறுதல் கூறுதல் போன்று இருக்கின்றதா அல்லவா என்பதைப் பார். உடனே நூலை எடுத்து ‘மார்க்’ பண்ணப்பட்டவைகளைப் படி¸ மந்திராவதிகளைக் கண்ட பிசாசுகள் போன்று கவலைப் பிசாசும் கால் பிடரியிலே பட ஓடி ஒழிகின்றதா என்பதையும் பார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “கவலைப்படாதே”

Your email address will not be published. Required fields are marked *