லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் முக்கூட்டு மேதையாகத் திகழ்கின்றார் கலீல் ஜிப்ரான்.
அரபி அவர் தாய்மொழி. பல நூல்களும் கட்டுரைகளும் தாய் மொழியில் எழுதி அமெரிக்காவிலும் அரபு நாடுகளிலும் எகிப்து நாட்டிலும் வெளிவந்தன.
மிகப்பெரிய சிந்தனையாளர், ஞானி, அஞ்சாநெஞ்சர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தனிமனித ஓவியக்கண்காட்சியை உலகின் மிகப்பெரிய நகரங்களில் நடத்தியவர்.
ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கிலத்திலேயே பல நூல்களை எழுதி சிறப்பு பெற்றவர். 1883இல் பிறந்து 1931 இல் மறைந்தார்.
இவர் எழுதிய முறிந்த சிறகுகள் லைலா – மஜ்னு ரோமியோ-ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும், அதில் காணப்படும் காதலின் தெய்வீக புனிதத்துவம் மற்ற காவியங்களில் காணமுடியாது.
செல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி அவள் தான் அவரைக் கவிஞனாக் கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் காணம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறித்துப் போட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு செல்மா இருப்பாள். ஆனால் ஜிப்ரான் தன் கண்ணீரைக் காவியமாக்கியது போல் மற்றவர்களால் முடியுமா என்பது ஐயமே. அந்த கண்ணீர்க் காவியம் தான்
‘முறிந்த சிறகுகள்’ பெயர்
‘முறிந்த சிறகுகள்’ என்றிருந்தாலும் இலக்கிய வானத்தில் மிக உயரமாகப் பரந்த நூல் இது.
இந்நூலைத் தமிழாக்கம் செய்தவர்
ஆ. மா. ஜெகதீசன் ஆவார்.
Reviews
There are no reviews yet.