Skip to content

ஒரு துணைவேந்தரின் கதை (தன் வரலாறு) பாகம் 2

350.00

“ஒரு துணைவேந்தரின் கதை” (தன் வரலாறு) இரண்டாம் பாகம் தங்கள் கைகளில் தவழ்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் சே. சாதிக் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் கதையல்ல நிஜம். தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதியிருக்கிறார். அதனால் “ஒரு துணைவேந்தரின் கதை” என்று தலைப்பிட்டிருக்கிறார்.

இந்த நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் B.E படிப்பில் சேர்ந்தது, முதலாண்டு முடிவில் திருமணம், 1959ல் B.E  ஹானர்ஸ் பட்டம் பெற்றது, பிறகு அங்கேயே 1959இல் ஆசிரியர் பணியில் சேர்ந்தது, பின் மூன்று வருடம் கழித்து மீண்டும் மாணவராக பெங்களூர் IISc யில்(Indian Institute of Science) சேர்ந்து M.E பட்டம் பெற்றது ஆகியவைகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார்.

ஆசிரியரின் ஞாபகசக்தி மிகவும் அபரிமிதமானது. 60 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். தன்னுடன் பள்ளியில் படித்த மாணவர்கள், தனக்கு போதித்த ஆசிரியர்கள், கல்விச் சுற்றுலாவிற்கு சென்ற போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சுவைபட எழுதியிருக்கின்றார்.

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, B.E.,M.E. படித்து பின் கனடாவில் Ph.D படித்து பட்டம் பெற்று, சென்னையில் மதிப்புமிக்க கல்லூரியான MIT யில் இயக்குனர் பதவி, பின் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, இன்றும் 80 வயதை கடந்தும் பல கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஆலோசகராகத் திகழ்கின்றார் என்றால் அவரது நினைவாற்றல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி தான் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது எனலாம்.

இந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் குறிப்பாகப்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.

எஸ்.எஸ்.ஷாஜஹான்

யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு துணைவேந்தரின் கதை (தன் வரலாறு) பாகம் 2”

Your email address will not be published. Required fields are marked *