மனித குலத்தின் பாரம்பரிய அறிவுச் செல்வம் தொன்மக் கதைகள் எனலாம். உலகளாவிய தொன்மக் கதைகளை ஆராய்ந்த கிளாட் லெவிஸ்ட்ராஸ் இவற்றின் மூலம் கால காலங்களாக மக்களிடையே காணப்படுகின்ற பொதுப் பண்புகளை, அமைப்பியல் வடிவிலான சீர் மரபுகளைக் கண்டறிய முடியும் என்று தீர்மானித்தார். பண்டுத் தொன்மங்களில் எகிப்தியர் பங்களிப்பை ஒதுக்கி விட முடியாது. எகிப்தியத் தொன்மக் கதைகள் பேரண்ட இயல் உலக ஆற்றல்களை மையப்படுத்தி எழுந்த கடவுளர்களின் கதைகளைச் சொல்பவை.
எகிப்தைக் குறித்துத் தெரிந்து கொண்டு இந்த்த் தொன்மக் கதைகளைப் புரட்டலாம். ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாற்றுச் செய்திகள் தொன்மங்களில் கிடக்கின்றன. எகிப்தியரின் வரலாறு, நம்பிக்கை கடவுள்கள், பலிகள், சடங்குகள் மேலும் அறிவியல் அடிப்படையில் எகிப்தியரின் வானவியல் கருத்துக்கள் அறியப்பட வேண்டியவை.
எகிப்து நாட்டு பிரமிடுகளைப் போலவே அவர்களின் தொன்மக் கதைகளும் காலங்களைத் தாண்டி நிமிர்ந்து நிற்கின்றன.
Reviews
There are no reviews yet.