நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை. இந்நூலில்
- மாவீரன் அலெக்ஸாண்டர்,
- சாலாதீன்,
- ரிச்சர்ட் -1,
- செங்கிஸ்கான்,
- மாவீரன் ஃபிரெடரிக்,
- நெப்போலியன் போனபார்ட்,
- கார்ல் மார்க்ஸ்,
- மகாத்மா காந்தி,
- வின்ஸ்டன் சர்ச்சில்,
- ஜோசப் ஸ்டாலின்,
- முஸ்தபா கமால் பாட்சா,
- ஜவஹர்லால் நேரு,
- மாசேதுங் ,
- மார்ட்டின் லூதர் கிங்
ஆகிய 14 மாபெரும் தலைவர்களின் வரலாறு சுவைபட தரப்பட்டுள்ளது. இந்தத் தலைவர்களின் வரலாறு மற்றவர்களுக்கு உந்துதல் தரக் கூடியதாகவே உள்ளது . அவர்களின் அறிவு, வீரம் போன்றவை நமக்கும் பாதை போட்டு தருகின்றன. அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் காலத்தைத் தாண்டி நாடு எப்படி இருக்கும் என்பதைக் கண்டவர்கள்.
இந்த மாபெரும் தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிநடத்திச் சென்றனர். இந்தத் தலைவர்களின் வரலாற்றினை படிக்கும் நமக்கும் அந்த உறவு ஏற்படும் என்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.