நூலின் தலைப்பைப் பற்றி ஓர் அறிஞன் குறிப்பிடுங்கால்¸ “ஒருவனுடைய முகத்தைப் பார்த்ததும் அவனுடைய அகத்தை விளங்கிக் கொள்ள இயலுவது போன்று ஒரு நூலின் தலைப்பைக் கண்டதும் அதன் உள்ளே என்ன உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம்” என்று எடுத்துரைத்தான். ஆனால் ஏமாற்று வித்தைகள் மலிந்து வெளிப் பகட்டில் மக்களை மயக்கும் வாணிபம் மிகுந்துள்ள இக்காலத்தில் நான் கூறுவது பொருந்துமா என்று நீ கேட்கலாம். ஒரு வகையில் பொருந்தாதுதான். எனினும் நீ உன்னுடைய அபிமான ஆசிரியராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். நான் எழுதும் நூல்களை நீ ஆவலோடு திறந்து படித்து மகிழ்ச்சியோடு நற்பலன் பெற்றோம் என்ற பெருமிதத்துடனும் முடித்துக் கீழே வைக்கிறாய் என்பதையும் நான் உணர்வேன். அதற்கு மாறாக இந்நூல் உன்னை ஏமாற்றமுறச் செய்யாது என்று நான் உனக்கு உறுதி கூறுகிறேன்.
இந்நூலின் தலைப்பே இதுவரை உன்னுடைய சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். எனினும் அதிகமாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாது நூலைத் திறந்து படி! படித்து அதன்படி நீ நடந்து உன்னையே நீ தோற்கடித்து விட்டால் உன்னையே நீ வெற்றி கொண்டவனாவாய்¸ உன்னால் நீ வெற்றி கொள்ளப்பட்டால் உன்னையே நீ தோற்கடித்துக் கொண்டவனாவாய். உன்னையே நீ வெற்றி கொண்டு விட்டால் நீ உண்மையில் வெற்றி பெற்றுவிட்டவனாவாய். அதன்பின் நீ ஒரு மனிதனல்லன்; ஓர் அமரன்.
-அப்துற்-றஹீம்
Reviews
There are no reviews yet.